நிலக்கரி இறக்குமதியில் மோசடி: 2.1 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதம்
தரமற்ற நிலக்கரி விநியோகத்திற்காக சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து சுமார் 2.1 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் பொது முகாமையாளர் நாமல் ஹேவகே தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய நிலக்கரி இறக்குமதி விவகாரம் குறித்து தெளிவுபடுத்துவதற்காக இன்று(28.01.2026) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நிலக்கரி இறக்குமதி
லக்விஜய நிலக்கரி மின் நிலையத்தின் நிபுணர்கள் முன்னிலையில் நிலக்கரி மாதிரிகள் பெறப்பட்டு, அவை மேலதிக பரிசோதனைகளுக்காக இந்தியாவுக்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், இரண்டாவது நிலக்கரி கப்பலின் மாதிரி அறிக்கைகளில் எந்தவித சிக்கல்களும் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மூன்றாவது மற்றும் நான்காவது கப்பல்களிலிருந்து நிலக்கரி இறக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது என்றும் நாமல் ஹேவகே குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அவர், நிலக்கரி எரிப்பு மூலம் உருவாகும் சாம்பலினால் சூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என உறுதியளிக்க முடியும். இது குறித்து சம்பந்தப்பட்ட நிபுணர்களிடம் கேட்டறிந்ததாகவும், இந்த விடயம் தொடர்பில் அவர்கள் தனக்குத் தெளிவுபடுத்தியதாகவும் கூறியுள்ளார்.
நிலக்கரி சாம்பல்
நிலக்கரியைப் பயன்படுத்தும் போது இரண்டு வகையான சாம்பல் உருவாகுவதாகவும், அவை பறக்கும் சாம்பல் (Fly ash) மற்றும் அடிச்சாம்பல் (Bottom ash) எனவும், இந்தச் சாம்பல்களால் சூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், பறக்கும் சாம்பலுக்கு (Fly ash) அதிக கேள்வி நிலவுவதால், அதற்கென விசேடமாகத் தயாரிக்கப்பட்ட இயந்திரங்களைப் பயன்படுத்தி, சூழலுக்குத் திறந்த நிலையில் இல்லாத வகையில் வாடிக்கையாளர்கள் அதனை எடுத்துச் செல்வதை நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
எனவே, பறக்கும் சாம்பலினால் சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri
உண்மையை மறைத்த கோமதி-மீனாவிற்கு, பாண்டியன் செந்தில் கொடுத்த தண்டனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam