கல்முனை மாநகர சபையில் நிதிக்கையாடல் தொடர்பில் வெளியான தகவல்...!

Sri Lanka Kalmunai
By Farook Sihan Mar 03, 2023 12:23 PM GMT
Report

கல்முனை மாநகர சபையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பான விடயங்களைத் தவறாகப் பலர் பரப்பி வருவதாக கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் (02.03.2023) கல்முனை மாநகர சபையில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பாக விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்து கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் கருத்து தெரிவிக்கையில், கல்முனை மாநகர சபையில் நிதிக்கையாடலில் ஈடுபட்ட ஊழியர்கள் தொடர்பாகப் புதிய ஆதாரம் தற்போது சிக்கியுள்ளது.

கல்முனை மாநகர சபையில் நிதிக்கையாடல் தொடர்பில் வெளியான தகவல்...! | Financial Transactions In Kalmunai

நடவடிக்கை

இந்த விடயத்தின் பின்னணியில் யார் இருப்பினும் நீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதற்கமைய ஆணையாளர் தலைமையில் விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டு, நிதி கையாடல் சம்பவங்கள் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனக் கூறியுள்ளார்.

மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி ரோசன் அக்தர் கூறியதாவது, மாநகர சபையில் இடம்பெற்ற நிதிக்கையாடல் விடயங்களைப் பொதுவெளியில் பேசுவதைத் தவிர்த்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை மேற்கொள்வதற்கு அனைவரும் ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் சிலர் காழ்ப்புணர்ச்சியினால் பொதுவெளியில் பேசி வருகின்றனர்.

வெளிநாடுகளுக்கு அவர்கள் தப்பிச் செல்லாத வகையில் பொலிஸார், நீதிமன்ற உத்தரவினை பெற்று நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். எனவே, எமது கட்சித் தலைவர் மற்றும்  நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோருக்கு சேறு அடிப்பதற்குச் சிலர் சோடிக்கப்பட்ட கதைகளைப் பரப்பி வருவதானது அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு ஓப்பானது எனத் தெரிவிக்க விரும்புகின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.

கல்முனை மாநகர சபையில் நிதிக்கையாடல் தொடர்பில் வெளியான தகவல்...! | Financial Transactions In Kalmunai

நிதி கையாடல்

கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.சி சத்தார் குறிப்பிடுகையில், கல்முனை மாநகர சபையில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற நிதிமோசடி தொடர்பான விடயங்களைத் தவறாகப் பலர் பரப்பிவருகின்றார்கள். ஆனால் மாநகர சபையில் ஒரு நிதி கையாடல் இடம்பெற்றிருக்கின்றது. மாநகர நிதிப்பிரிவில் இருந்த ஊழியர்களினால் இடம்பெற்றுள்ளது.

இந்த ஊழியர்களினால் மேற்கொள்ளப்பட்ட இச்செயற்பாட்டில் எமது முதல்வருக்கோ எமது உறுப்பினர்களுக்கோ எவ்விதமான சம்பந்தமும் இல்லை. 5 வருடங்களாகச் சபையை நாம் வழிநடத்துகின்றோம். ஒவ்வொரு வருடம் கணக்காய்வு பிரிவினர் வருகை தந்து கணக்குகளை ஆராய்வார்கள். மத்திய அரசு மாகாண அரசிலிருந்து இவர்கள் வருவார்கள்.

4 முதல் 5 தடவை இவ்வாறு வருகை தந்து கணக்குகளை ஆராய்வார்கள். அவர்களது அறிக்கையைத் தான் நாங்களும் நம்பலாம். நாங்கள் உட்பட எமது முதல்வர் கூட வரிப்பணம் மேற்கொள்கின்ற இடத்திற்குச் சென்று பார்க்க முடியாது. இதற்காகக் கணக்காளர் உட்பட உத்தியோகஸ்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

கல்முனை மாநகர சபையில் நிதிக்கையாடல் தொடர்பில் வெளியான தகவல்...! | Financial Transactions In Kalmunai

காங்கிரஸ் தான் ஆட்சி அமைக்கும் 

அவர்கள் அதை ஒழுங்கு படுத்துவார்கள். நிர்வாகத்தில் ஏற்படுகின்ற களவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல.தற்போது வெளிவந்துள்ள நிதிமோசடி தொடர்பில் வங்குரோத்து அரசியல்வாதிகள் சிலர் எங்கள் மீது சேறு பூசுகின்றார்கள்.

எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் மீதும் சேறு பூசுகின்றார்கள். இது அரசியலில் எடுபடாது. ஏனெனில் கடந்த 23 வருடங்களாக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் மாநகர சபையை வழிநடத்தி வருகின்றது. இன்னும் 40 முதல் 60 வருடங்களுக்குக் கூட கல்முனை மாநகர சபையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தான் ஆட்சி அமைக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்தியாளர் சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் உறுப்பினர்களான சட்டத்தரணி ரோசன் அக்தர் ஏ.சி.சத்தார் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US