மந்திரவாதிக்கு கொடுக்கப்பட்ட மில்லியன் கணக்கான பணம்! திலினி பிரியமாலி தொடர்பில் வெளிவரும் பல உண்மைகள்
கோடிக்கணக்கில் நிதி மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் திலினி பிரியமாலி தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, ஆசிர்வாத பூஜை ஒன்றுக்கான திலினி பிரியமாலி 80 மில்லியன் ரூபா பணம் வழங்கியுள்ளதாக தெரியவருகின்றது.
குற்றப் புலனாய்வு திணைக்களம், கொழும்பு மேலதிக நீதிவான் ஷிலான பெரேரா முன்னிலையில் இது தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர்.
மந்திரவாதிக்கு கொடுக்கப்பட்ட பணம்

திகோ குழுமத்தின் உரிமையாளர் திலினி பிரியமாலி மற்றும் கிறிஸ் குழுமத்தின் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன ஆகியோர் இவ்வாறு 80 மில்லியன் ரூபாவை தமக்கான ஆசீர்வாத பூஜைக்காக, மந்திரவாதி ஒருவருக்கு வழங்கியுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், முறைப்பாடு செய்தவர்களிடமிருந்து திலினி பிரியமாலி பெற்ற பணம், கிறிஸ் குழும அலுவலகத்தில் வைத்து ஜானகி சிறிவர்தனவுக்கு வழங்கப்பட்டமை குறித்த உண்மைகளும் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.
அமெரிக்காவால் ஈரானில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா..! 18 மணி நேரம் முன்
வெளியே போக சொன்ன சேது, அதிர்ச்சி முடிவு எடுத்த தமிழ்ச்செல்வி... சின்ன மருமகள் சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
Tamizha Tamizha: காதலித்த கணவருக்கு கண்முன் நடந்த இரண்டாவது திருமணம்! 14 ஆண்டுகளாக குறையாத காதல் Manithan