நிர்மான பணியில் நிதி மோசடி! சாணக்கியன் மீது குற்றச்சாட்டு
நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு, கல்லாறில் கூட்டுறவு சங்கத்துக்கு கட்டிடம் நிர்மானிக்க 50 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டதாகவும், ஆனால் கட்டிடமே கட்டி முடிக்காமல் நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாகவும், ஈழ மக்கள் ஜனநாயக முன்னணி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அன்ரனிசில் ராஜ்குமார் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பாக தேர்தல் திணைக்களம் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
இரா.சாணக்கியன்
நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு ஒதுக்கப்பட்ட விசேட நிதி 400 மில்லியன் ரூபாவினால் 65 ஆயிரம் வாக்குகளை பெற்றாரே தவிர உண்மையான வெற்றி அல்ல.

மட்டக்களப்பில் அபிவிருத்திக்காக 25.07.2024 நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு விசேட நிதியாக 400 மில்லியன் ரூபாவும் வரவு செலவு திட்டத்தில் 5 கோடி ரூபா பணமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த விசேட நிதி ஒதுக்கப்பட்டதிலே மட்டக்களப்பு, கல்குடா தேர்தல் தொகுதி புறக்கணிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் வறுமை ஒழிக்கப்பட வேண்டும் மற்றும் அடிப்படை வசதி இல்லாத மக்கள் அதிகமாக இருக்கின்றனர்.
இந்தநிலையில், இவர்கள் எல்லாம் புறக்கணிக்கப்பட்டு பட்டிருப்பு தேர்தல் தொகுதியை முன்னிலைப்படுத்தி பெருவாரியான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிதி தேர்தலுக்கு அண்டிய காலத்திலும் அதன் பின்னரும் கட்டம் கட்டமாக வழங்கப்பட்டுள்ளது.
களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகம்
இதில், களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு வழங்கப்பட்ட தொகை 10 கோடியே 6 இலட்சம் ரூபா, வெல்லாவெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பிரதேசங்களுக்கு 10 கோடியே 20 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா, மட்டக்களப்பு தொகுதிக்கு 4 கோடியே 44 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், பட்டிருப்பு தொகுதியை முன்னிலைப்படுத்தி அனைத்து இந்து கிறிஸ்தவ ஆலயங்கள் விளையாட்டு மைதானங்கள், மயானங்கள் மற்றும் பொது அமைப்புகளுக்கு பெரும் தொகையான நிதி வழங்கப்பட்டுள்ளதுடன் கல்குடா, மட்டக்களப்பு தொகுதிகளுக்கு மிக சிறிய தொகையை வழங்கி புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பதுடன், நிதி தேவையானவற்றுக்கு ஒதுக்கப்படாமல் நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது. இதனை வன்மையாக கண்டிக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 5 மணி நேரம் முன்
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri