இஸ்ரேல் - அமெரிக்காவுக்கு இனப்படுகொலை முத்திரை! பொறுப்புக்கூறலுக்கு அறைகூவல்
காசாவில் இடம்பெற்ற இனப்படுகொலைகளுக்கு இஸ்ரேல், மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளே பொறுப்பேற்க வேண்டும் என அமெரிக்கா - பாலஸ்தீனத்திற்கான வழக்கறிஞர் லாரா எல்போர்னோ(Lara Elborno) சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த பொறுப்புக்கூறல், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் போன்ற சர்வதேச அதிகார வரம்புகளுக்கு முன்பாகவே இடம்பெறவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இனப்படுகொலை
மேலும், இனப்படுகொலையின் கட்டமைப்பாளர்கள் என முத்திரை குத்தப்பட்டுள்ள இஸ்ரேலிய தலைவர்களுக்கு மட்டுமல்ல, இனப்படுகொலையை செயல்படுத்தி செயல்படுத்திய வீரர்களுக்கும், பல சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் வீடுகளை அழித்து, பாலஸ்தீன பொதுமக்களை குறிவைத்து மகிழ்ச்சியுடன் செயல்பட்டவர்களுக்கும்" பொறுப்புக்கூறல் செயல்படுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
இதற்கமைய இந்த இனப்படுகொலைக்கு உடந்தையாக இருந்த நாடுகள், குறிப்பாக அமெரிக்காவும் பொறுப்பேற்க வேண்டும் என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
