இலங்கையின் ரக்பிக்கு விடுக்கப்பட்டுள்ள இறுதி எச்சரிக்கை
இலங்கையின் ரக்பிக்கு உலக ரக்பி இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இதன்படி 2025 ஒக்டோபர் 19ஆம் திகதிக்கு முன்னர் நிர்வாகத் தேர்தல் நடத்தப்படாவிட்டால், இலங்கை ரக்பி விளையாட்டு தொடர்பான விடயங்கள் தடை செய்யப்படு;ம் என்று உலக ரக்பி எச்சரித்துள்ளது.
ஒரு வருடத்திற்கும் மேலான கால அவகாசம்
இது தொடர்பில் உலக ரக்பி, இலங்கையின் ஒலிம்பிக் குழுவுக்கு அறிவித்துள்ளது.
இலங்கையின் ரக்பியில் தொடர்ந்தும் உள்ள மோதல்கள் நீடிக்கின்றன.
இதனை தீர்ப்பதற்காக, ஒரு வருடத்திற்கும் மேலான கால அவகாசத்தை உலக ரக்பி வழங்கியிருந்தது.
எனினும் இன்னும் அந்த முறுகல் தீர்க்கப்படாத நிலையிலேயே தற்போது இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நிர்வாகிகள் தேர்தல் இல்லாத நிலையில், இலங்கை ரக்பி, அரசாங்க தகுதிவாய்ந்த அதிகாரசபையால் நிர்வகிக்கப்பட்டது தற்போது அது, பணிக்குழு ஒன்றின் நிர்வாகத்தில் செயற்பட்டு வருகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



