பயங்கரவாத அமைப்பை வேரறுக்க திட்டம் தீட்டப்பட்ட இடம்.. முன்னாள் இராணுவத் தளபதியின் பகிரங்க தகவல்

Mahinda Rajapaksa Sarath Fonseka Sri Lanka Final War Ministry of Defense Sri Lanka
By Rakesh May 20, 2026 07:00 AM GMT
Report

உலகமே வெல்ல முடியாது என்று கூறிய கொடூரமான பயங்கரவாத அமைப்பை இந்த நாட்டின் மண்ணிலிருந்து வேரறுப்பதற்கான திட்டமிடல்கள் எனது அலுவலகத்திலேயே இடம்பெற்றன என முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைமையக காரியாலயத்தில் நேற்று (19.05.2026) நடைபெற்ற இராணுவ வீரர்களின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

கபில சந்திரசேனவின் திடீர் மரணம்! அரவிந்த டி சில்வாவின் வீட்டுப்பணியாளர் வழங்கிய முக்கிய சாட்சியம்

கபில சந்திரசேனவின் திடீர் மரணம்! அரவிந்த டி சில்வாவின் வீட்டுப்பணியாளர் வழங்கிய முக்கிய சாட்சியம்

மகிந்த ராஜபக்ச அரசின் புதிய கொள்கை

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

"முப்பது வருடங்களாகத் தொடர்ந்த போரில் 30 ஆயிரம் இராணுவ வீரர்கள் தமது உயிர்களைத் தியாகம் செய்துள்ளதுடன், 30 ஆயிரத்துக்கும் அதிகமான இராணுவ வீரர்கள் தமது உடல் உறுப்புகளை இழந்துள்ளனர்.

இராணுவ வீரர்கள் மட்டும் தனியாக இந்த வெற்றியை ஈட்டவில்லை. அன்றைய காலகட்டத்தில் இருந்த அரசியல், சமூக, பொருளாதாரத் தலைமைத்துவங்கள், ஒட்டுமொத்த நாட்டு மக்கள் மற்றும் தாய்நாட்டை நேசித்த புலம்பெயர் மக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து வழங்கிய கூட்டுச் சக்தியினாலேயே இது சாத்தியமானது.

பயங்கரவாத அமைப்பை வேரறுக்க திட்டம் தீட்டப்பட்ட இடம்.. முன்னாள் இராணுவத் தளபதியின் பகிரங்க தகவல் | Final Strategic War Army Commander Reveals

2005 ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற மஹிந்த ராஜபக்ச அரசு ஒரு புதிய கொள்கையை முன்வைத்தது.

கோட்டாபய ராஜபக்சவின் வழிநடத்தலின் கீழ், அன்றைய முப்படைத் தளபதிகளான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, அட்மிரல் வசந்த கரன்னாகொட, எயார் சீஃப் மார்ஷல் ரொஷான் குணதிலக ஆகியோருடன் பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினர் இணைந்து 'மனிதாபிமான நடவடிக்கை' எனும் கொள்கையை உருவாக்கினர்.

கிழக்கு மாகாணத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த நடவடிக்கை தொடர்பான ஆலோசனைகள் எனது அலுவலகத்திலேயே இடம்பெற்றன.

பயங்கரவாத அமைப்பை வேரறுக்க திட்டம் தீட்டப்பட்ட இடம்.. முன்னாள் இராணுவத் தளபதியின் பகிரங்க தகவல் | Final Strategic War Army Commander Reveals

இராணுவத்தின் சிரேஷ்ட தளபதிகளான பிரசன்ன சில்வா மற்றும் சாகி காலகே ஆகியோர் என்னுடன் ஒன்றிணைந்து இதற்கான திட்டங்களை வகுத்தனர்.

ஜெனரல் பிரசன்ன சில்வாவின் தலைமையில் வாகரைப் பகுதியும், ஜெனரல் சாகியின் தலைமையில் தொப்பிகல பகுதியும் மனிதாபிமான நடவடிக்கையினூடாக வெற்றிக் கொள்ளப்பட்டு, இறுதியாக நந்திக்கடல் வரை அந்தப் பயணம் தொடரப்பட்டு முழுமையான வெற்றி எட்டப்பட்டது.

யுத்தத்தின் வெற்றி

யுத்தம் வெற்றியை நோக்கி நகர்வதற்கு முன்னர், திலித் ஜயவீர மற்றும் வருணி ஆகியோர் தங்களது 'அபி வெனுவென் அபி' கொள்கையினூடாக எமக்குத் தேவையான அனைத்துப் பிரச்சாரங்களையும் ஊடக ஆதரவுகளையும் வழங்கிச் சிவில் சமூகத்தை இராணுவத்துடன் ஒன்றிணைக்கப் பெரும் பங்காற்றினர்.

ஆனால், ஒரு இராணுவ வீரனாக இன்று நாட்டில் அரசியல் ரீதியான ஒற்றுமையோ அல்லது எதிர்காலத்தை நோக்கிய தொலைநோக்குப் பார்வையோ இல்லாத நிலையைத்தான் காண முடிகின்றது.

பயங்கரவாத அமைப்பை வேரறுக்க திட்டம் தீட்டப்பட்ட இடம்.. முன்னாள் இராணுவத் தளபதியின் பகிரங்க தகவல் | Final Strategic War Army Commander Reveals

2009ஆம் ஆண்டின் வெற்றிற்குப் பின்னர் நாம் எதிர்பார்த்த அழகான இலங்கை கிடைக்காதது குறித்து நாம் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளோம்.

எமது அடுத்த தலைமுறைக்கு இந்த வரலாற்று வெற்றிகளைக் கொண்டு சேர்க்க வேண்டுமாயின், இராணுவ இலக்கியம் என்ற ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.

எனவே, நான் முன்னின்று 'இராணுவ இலக்கிய மன்றம்' என்ற ஒன்றை உருவாக்கி, புத்தகங்களை எழுதி இந்த வரலாற்றைச் சமூகமயப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளேன்" என தெரிவித்துள்ளார்.

இலங்கைக்குள் வந்துள்ள எதிர்பார்த்ததை விட அதிக வாகனங்கள்! விலை உயர்வு தொடர்பில் வெளியான அறிவிப்பு

இலங்கைக்குள் வந்துள்ள எதிர்பார்த்ததை விட அதிக வாகனங்கள்! விலை உயர்வு தொடர்பில் வெளியான அறிவிப்பு

மகிந்தவின் நெருங்கிய சகாவின் மரணத்தில் தொடரும் மர்மம் - அருகில் சிக்கிய பொருட்கள்

மகிந்தவின் நெருங்கிய சகாவின் மரணத்தில் தொடரும் மர்மம் - அருகில் சிக்கிய பொருட்கள்

மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US