இலங்கையில் தேசிய திரைப்படப் பாடசாலை அமைக்க ஏற்பாடு!
நாட்டில் தேசிய திரைப்படப் பாடசாலையை நிறுவுவது குறித்து கலை மற்றும் கலாசார விவகாரங்களுக்கான நாடாளுமன்ற மன்றம் கவனம் செலுத்தியுள்ளது.
கலைகள் மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய நாடாளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலேயே இது பற்றி அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில், வெகுசன ஊடக பிரதி அமைச்சர் (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்னவும் Dr. Kaushalya Ariyaratne கலந்து கொண்டார்.
திருகோணமலை வைத்திசாலையில் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கும் பிக்குகள்:சர்ச்சையை கிளப்பும் சிவில் அமைப்புகள்
திரைப்படத்துறையின் எதிர்காலம்
இந்தப் பாடசாலையானது திரைப்படம் குறித்த அறிவை வழங்குவது மட்டுமன்றி, நடைமுறை ரீதியாக திரைப்படங்களை தயாரிக்கும் கலைஞர்களை உருவாக்கும் பாடநெறிகளைக் கொண்ட நிறுவனமாக அமைய வேண்டும் என்று இங்கு வலியுறுத்தப்பட்டது.

சர்வதேச திரைப்படப் பாடசாலைகளின் தரத்திற்கு ஏற்ப இதனைப் பேண வேண்டியதன் அவசியமும் கலந்துரையாடப்பட்டது.
திரைப்படத் துறையின் வளர்ச்சிக்காக இத்தகைய பாடசாலையை நிறுவுவது குறித்து நீண்டகாலமாகப் பேசப்பட்டு வந்தாலும், அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
நிலா மீது கடும் வருத்தத்தில் இருக்கும் சோழனுக்கு ஷாக் கொடுத்த ஒரு சம்பவம்... அய்யனார் துணை எபிசோட் Cineulagam
தமிழக அரசின் சிறந்த சின்னத்திரை கலைஞர்களுக்கான விருது (2014-2022)... யார் யாருக்கு விருது, முழு விவரம் Cineulagam