சட்டத்தரணிகளுக்கு எதிராக வழக்கு: பீ அறிக்கையை மீளப்பெற்ற பொலிஸார்
கடந்த 18ஆம் திகதி கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக எதிர்ப்பில் ஈடுபட்ட சட்டத்தரணிகள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த பீ அறிக்கை வாழைத்தோட்டம் பொலிஸாரால் இன்று(24) மீளப்பெறப்பட்டுள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் தரங்கா மஹவத்த மீது சட்ட மா அதிபர் திணைக்களம் தேவையற்ற அழுத்தங்களை பிரயோகித்ததாக கூறி சட்டத்தரணிகள் குழுவொன்று அன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
இதில் கலந்துகொண்ட 03 சட்டத்தரணிகளுக்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் B அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
பீ அறிக்கையை மீளப்பெற்ற பொலிஸார்
குறித்த அறிக்கையை பரிசீலித்த பிரதம நீதவான் பிரசன்ன அல்விஸ், விசாரணைகளை நடத்தி நீதிமன்றத்தில் விடயங்களை அறிக்கையிடுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தார்.
எவ்வாறாயினும், குறித்த முறைப்பாடு இன்று(24) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, மேலதிக நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளாமல் அறிக்கையை மீளப் பெறுவதற்கு அனுமதி கோருவதாக வாழைத்தோட்டம் பொலிஸார், மன்றுக்கு தெரிவித்தனர்.
அதற்கு அனுமதியளித்த கொழும்பு பிரதம நீதவான் பிரசன்ன அல்விஸினால் இந்த வழக்கு முடிவிற்கு கொண்டுவரப்பட்டது.

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
