முன்னாள் பிரதேச செயலாளர் உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு எதிராக மனித உரிமை மீறல் வழக்கு தாக்கல்
செங்கலடி முன்னாள் பிரதேச செயலாளர் ந.வில்வரெட்ணம் உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு எதிராக அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளதாக தெரியவருகின்றது.
செங்கலடி பிரதேச செயலாளராக கடமையாற்றிய ந.வில்வரெட்ணம் (N.Wilverton) கடந்த ஐந்து மாதகாலமாக பாலியல் குற்றச்சாட்டு, மற்றும் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கொழும்பில் விசாரணைக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது புதிய பிரதேச செயலாளராக கே.தனபாலசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை கடந்த ஐந்து மாத காலமாக செங்கலடி பிரதேச செயலகத்தில் பதில் பிரதேச செயலாளராக கிரான் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாவு கடமையாற்றியிருந்தார்.
இதேவேளை பாலியல் குற்றச்சாட்டு, மற்றும் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் விசாரணைக்காக எடுக்கப்பட்ட செங்கலடி முன்னாள் பிரதேச செயலாளர் ந.வில்வரெட்ணம் உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு எதிராக அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
| மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
ஆரம்பமாகிய சூர்ய பெயர்ச்சி... பிறந்தது மார்கழி மாதம்! அதிர்ஷ்டத்தை தட்டித்தூக்கும் 6 ராசிகள் Manithan
விஜய்யின் ஜனநாயகன் படத்தின் 2வது சிங்கிள் பாடல் எப்போது... வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு Cineulagam