தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிக்கு ஆதரவான போராட்டம்! 72 பேர் பலி

Death Violence South africa
By Benat Jul 14, 2021 07:25 AM GMT
Report

தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜெக்கப் சுமா சிறையில் அடைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டில் ஏற்பட்ட பட்ட அமைதியின்மையால் குறைந்தது 72 பேர் உயிரிழந்துள்ளனர்.

போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த ஆயிரக்கணக்கான பொலிஸார் கடமையில் ஈடுபட்டுள்ளனர். நிறவெறி ஆட்சி முடிவடைந்த 27 ஆண்டுகளில் ஏற்பட்ட கொடூரமான வன்முறை மற்றும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெப்போதும் இடம்பெறாதது என ஜனாதிபதி சிரில் ரமபோசா விவரித்துள்ளார்.

அதேவேளை, 1,200 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந் நிலையில் போராட்டக்காரர்களின் இடையூறுகள் தென்னாபிரிக்கா முழுவதும் மருந்துகள் மற்றும் உணவுப்பொருட்களின் கடுமையான பற்றாக்குறையை ஏற்படுத்தும் என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

வன்முறை அலை தென்னாபிரிக்காவின் தடுப்பூசி நிலையங்களை தாக்கியுள்ளதுடன், காசநோய் மற்றும் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளால் மருந்து சேகரிப்பு உள்ளிட்ட அத்தியாவசிய சுகாதார சேவைகளுக்கான அணுகலையும் பாதித்துள்ளது.


அமைதியின்மையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடுப்பூசி போடுவதற்கான நியமனங்கள் உள்ளவர்கள் மீள்பரிசீலனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிகிச்சை நிலையங்கள் சூறையாடப்பட்டதாகவும், கொடூரமான மூன்றாவது அலை கொரோனா தொற்றுநோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலை ஒட்சிசன் வழங்குவதில் சிக்கல் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்காக தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜெக்கப் சுமாவிற்கு 15 மாத சிறைத்தண்டனைக்கு விதிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் விவகாரம் குறித்த விசாரணைகளுக்காக நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதை தொடர்ந்து, நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டுடன் முடிவுக்கு வந்த சுமாவின் ஆட்சிக் காலத்தில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தீர்மானங்களை மேற்கொள்ளும் விடயங்களில் வர்த்தகர்கள் அரசியல்வாதிகளுடன் இணைந்து சதிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந் நிலையிலேயே சுமாவின் ஆதரவாளர்களின் கலவரம் கடந்த வாரம் அவரது சொந்த பிராந்தியமான குவாசுலு-நடால் (KwaZulu-Natal) மாகாணத்தில் ஆரம்பமாகி வார இறுதியில் தென்னாபிரிக்காவின் மிகப்பெரிய நகரமான ஜொஹனஸ்பேர்க்கை (Johannesburg) உள்ளடக்கிய கெளடெங் (Gauteng) மாகாணத்திற்கு பரவி இப்பொழுது பாரிய களவரமாக மாறியுள்ளது.

On Wed, 14 Jul 2021 at 10:45, dilshan Vinsan wrote: தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஜுமா சிறையில் அடைக்கப்பட்டதன் காரணமாக தென்னாபிரிக்காவில் ஏற்பட்ட அமைதியின்மை நேற்று தீவிரமடைந்தது.

போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த ஆயிரக்கணக்கான போலீசார் கடமையில் ஈடுபட்டுள்ளனர். நிறவெறி ஆட்சி முடிவடைந்த 27 ஆண்டுகளில் ஏற்பட்ட கொடூரமான வன்முறை மற்றும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெப்போதும் இல்லாதது என்று ஜனாதிபதி சிரில் ரமபோசா விவரித்துள்ளார்.

ஏறக்குறைய ஒரு வார அமைதியின்மையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது, மேலும் பலர் காயங்களுக்குள்ளாகியும் உள்ளனர். அதேநேரம் 1,300 வன்முறையாளர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் போராட்டக்காரர்களின் இடையூறுகள் தென்னாபிரிக்கா முழுவதும் மருந்துகள் மற்றும் உணவுப்பொருட்களின் கடுமையான பற்றாக்குறையை ஏற்படுத்தும் என்று காவல்துறை அமைச்சர் பெக்கி செலே செய்தியாளர்களிடம் கூறினார்.

வன்முறை அலை தென்னாபிரிக்காவின் தடுப்பூசி நிலையங்களை தாக்கியுள்ளதுடன், காசநோய் மற்றும் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளால் மருந்து சேகரிப்பு உள்ளிட்ட அத்தியாவசிய சுகாதார சேவைகளுக்கான அணுகலையும் பாதித்துள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  அமைதியின்மையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடுப்பூசி போடுவதற்கான நியமனங்கள் உள்ளவர்கள் மறுபரிசீலனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிகிச்சை நிலையங்கள் சூறையாடப்பட்டதாகவும், கொடூரமான மூன்றாவது அலை கொவிட்-19 தொற்றுநோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் வழங்குவதில் சிக்கல் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்காக தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஜுமா 15 மாத சிறைத்தண்டனை அனுபவிப்பதற்கான சிறைச்சாலையில் அடைக்கப்படடார். ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் விவகாரம் குறித்த விசாரணைகளுக்காக நீதிமன்றத்தில் ஆஜராக தவறியதை தொடர்ந்து, நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டுடன் முடிவுக்கு வந்த ஜேக்கப் ஸூமாவின் ஆட்சிக் காலத்தில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தீர்மானங்களை மேற்கொள்ளும் விடயங்களில் வர்த்தகர்கள் அரசியல்வாதிகளுடன் இணைந்து சதிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது .


இந் நிலையிலேயே ஜுமாவின் ஆதரவாளர்களின் கலவரம் கடந்த வாரம் அவரது சொந்த பிராந்தியமான குவாசுலு-நடால் மாகாணத்தில் தொடங்கி வார இறுதியில் தென்னாபிரிக்காவின் மிகப்பெரிய நகரமான ஜோகன்னஸ்பர்க்கை உள்ளடக்கிய கெளடெங் மாகாணத்திற்கு பரவி இப்பொழுது பாரிய களவரமாக மாறியுள்ளது.    

மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US