மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ள முக்கிய போட்டிப்பரீட்சை - வெளியான காரணம்
புதிய இணைப்பு
இலங்கை அதிபர் சேவையின் தரம் 3 இற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக போட்டிப்பரீட்சை ஒரு மாதத்திற்குள் நடத்தப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.
நாளை (26) நடைபெறவிருந்த இலங்கை அதிபர் சேவையின் தரம் 3 இற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக போட்டிப்பரீட்சை மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக இன்று காலை ( 25) அறிவிக்கப்பட்டிருந்தது.
குறிப்பிட்ட போட்டிப்பரீட்சைக்காக வழங்கப்பட்ட விண்ணப்பங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பப்பிழை காரணமாகவே பரீட்சையை ஒத்திவைக்க பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்ததாகவும் விளக்கமளித்துள்ளார்.
இந்நிலையில், பிற்போடப்பட்ட குறித்த போட்டிப்பரீட்சை ஒரு மாதத்திற்குள் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
இலங்கை அதிபர் சேவையின் தரம் 3 இற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக போட்டிப்பரீட்சை மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளது.
நாளை (26) நடைபெறவிருந்த மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரீட்சையே தவிர்க்க முடியாத காரணங்களினால் பிற்போடப்பட்டுள்ளது.
புதிய திகதி
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகேவால் இந்த உத்தியோகபூர்வ அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
பாரதிராஜாவுக்கு தனது அஞ்சலியை செலுத்திய முதலமைச்சர் விஜய்.. அரசு மரியாதையுடன் இறுதி பயணம் Cineulagam
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri