FIFA உத்தியோகபூர்வ முகநூல் பக்கம் முற்றுகை - பிஃபாவை தனிமைப்படுத்தும் இரசிகர்கள்
ஃபிஃபாவின் (FIFA) அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில் சர்வதேச கால்பந்து ரசிகர்கள் தங்களின் உச்சக்கட்ட கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
2026 FIFA உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நாக்-அவுட் சுற்றில் ஆர்ஜென்டினா மற்றும் எகிப்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஆட்டத்தின் போது, நடுவர்கள் மற்றும் வீடியோ உதவி நடுவர் (VAR) குழுவினர் ஆர்ஜென்டினாவுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டது.
உலகெங்கிலும் உள்ள கால்பந்து இரசிகர்கள்
குறிப்பாக, இப்போட்டி முடிவடைந்ததைத் தொடர்ந்து FIFA பக்கத்தில் பதிவிடப்படும் எந்தவொரு புதிய பதிவாக இருந்தாலும், அதில் வழக்கமாகப் பதிவாகும் சாதாரண 'Like' மற்றும் 'Love' ரியாக்ட்களை முற்றிலும் பின்னுக்குத் தள்ளி, உலகளாவிய ரீதியில் ரசிகர்கள் இடும் 'Angry' ரியாக்ட்களே முதலிடத்தைப் பிடித்து வருகின்றன.
எகிப்து அணியின் இரண்டு பெனால்டி வாய்ப்புகள் மறுக்கப்பட்டதும், எகிப்து அடித்த ஒரு கோல் ரத்து செய்யப்பட்டதும் ரசிகர்களிடையே பாரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியதே இதற்கு முக்கிய காரணமாகும் என குறிப்பிடப்படுகிறது.

இதன் விளைவாக, FIFA பக்கத்தில் ஆர்ஜென்டினாவின் வெற்றிக் கொண்டாட்டங்கள் அல்லது பொதுவான செய்திகள் என எதனைப் பதிவிட்டாலும், அதற்கு ஆதரவாகப் விழும் லைக்குகளை விட, பல மடங்கு அதிகமாகக் கோபத்தை வெளிப்படுத்தும் ரியாக்ட்களே அனைத்துப் பதிவுகளிலும் முதன்மையாகப் பதிவாகி வருகின்றன.
ஃபிஃபா மற்றும் நடுவர்கள் திட்டமிட்டு ஆர்ஜென்டினாவை உலகக் கோப்பைத் தொடரில் முன்னோக்கி நகர்த்துவதாகக் குற்றம் சாட்டி, உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஃபிஃபாவின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தை முற்றிலும் முடக்கும் வகையில் தங்களின் கூட்டுப் போராட்டத்தை சமூக ஊடகங்களில் மிகத் தீவிரமாகத் தொடர்ந்து வருவதாக கால்பந்து ஆர்வலர்களால் தெரிவிக்கப்படுகின்றது.
140 - 145 வேகத்தில் பந்துவீசக்கூடியவர் எங்களிடம் இல்லை: தோல்வி குறித்து இலங்கை கேப்டன் News Lankasri
ஹனிமூன் வந்த இடத்தில் சோழன்-நிலாவிற்குள் ஏற்பட்ட சண்டை, பல்லவன் செய்தது என்ன?... அய்யனார் துணை புரொமோ Cineulagam