இலங்கை தேசியக்கொடியை முகக்கவசமாக அணிந்த பீபா தலைவர் (PHOTOS)
சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத் (FIFA) தலைவர் ஜியோவன்னி இன்பன்டீனோ (Gianni Infantino) இன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
இந்நிலையில்,இவர் இன்றைய தினம் அனுராதபுரத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளதுடன்,இலங்கையின் தேசியக் கொடி பொறிக்கப்பட்ட முகக்கவசத்தை அணிந்திருந்தமை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்படும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கிண்ண சர்வதேச அழைப்பு கால்பந்தாட்டத்தின் இறுதிப் போட்டியில் ஜியோவன்னி இன்பன்டீனோ விசேட அதிதியாக பங்கெடுக்கவுள்ளார்.
மேலும் இந்த இறுதிப் போட்டி இன்றிரவு 7 மணிக்கு கொழும்பு, ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் சிஷெல்ஸ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் ஆரம்பமாகியுள்ளது.
வெற்றி பெறும் அணிக்கு வெற்றியாளர் கிண்ணத்துடன் 30 ஆயிரம் அமெரிக்க டொலர் ரொக்கப் பரிசும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.








