யாழில் முறைகேடு தொடர்பான விசாரணைக்காக பிரதமரின் விசேட பிரதிநிதி நேரடி விஜயம்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிற்கான அரசாங்கத்தின் மீள்குடியேற்ற, வீட்டுத்திட்ட மற்றும் புனர்வாழ்வு ஒருங்கிணைப்பாளரான காசிலிங்கம் கீதநாத் யாழ்ப்பாணத்திற்கு நேரடி விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
அமைச்சரவை கூட்டத்தின்போது பிரதமரால் முன்மொழியப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணத்திற்கான விசேட அதிகாரியான இவர் இன்றைய தினம் மேற்கொண்ட குறித்த விஜயத்தின் போது வீட்டுத்திட்ட முறைகேடுகள் தொடர்பில் மக்களிடம் விசாரித்து அறிந்துள்ளதாக தெரியவருகிறது.
இந்த விஜயம் தொடர்பில் பிரதமரின் விசேட பிரதிநிதி காசிலிங்கம் கீதநாத்தின் டுவிட்டர் பக்கத்தில் இடப்பட்டுள்ள பதிவில், எப்பொழுதும் மக்களிடம் பேசி அவர்கள் எதிர்நோக்கும் குறைகள் தொடர்பில் கலந்துரையாட எதிர்பார்க்கிறோம்.
Field visits in #Jaffna today.
— G. Cassilingham (@CassilingamG) July 12, 2021
Always look fwd to speaking to the ppl & discuss their grievances.
The Govt. is working to resettle the remaining war affected families by providing them lands & houses. This is being done under a points system drawn up by the Resettlement Ministry pic.twitter.com/zZjnrsL86P
யுத்தத்தின் போது பாதிப்பிற்கு உள்ளான குடும்பங்களை, அவர்களுக்கு நிலம் மற்றும் வீட்டுத்திட்டங்களை வழங்குவதன் மூலம் மீள்குடியேற்ற இந்த அரசாங்கம் செயற்பட்டு வருகிறது.
மீள்குடியேற்ற அமைச்சால் வரையப்பட்ட புள்ளிகள் முறையின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி...
மீள்குடியேற்ற செயற்றிட்ட விசேட அதிகாரியாக கீதனாத் நியமனம்
யாழில் மோசடிகளை தடுக்க பிரதமரின் விசேட அதிகாரி
