மன்னார் மாந்தை சோழமண்டல குளம் குறித்து மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வு
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சோழமண்டல குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடப்பெயர்களின் தன்மைக்கேற்ப சோழர்களாலும் அதற்கு முந்தைய காலத்தில் பண்டைய தமிழர்களாலும் ஆட்சி செய்யப்பட்டு வந்திருக்கலாம் எனும் சந்தேகத்தின் அடிப்படையில் அப்பகுதியின் சில முக்கியமான இடங்களில் தொல்லியல் தொடர்பான கள ஆய்வு பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் தலைமையில் இடம்பெற்றது
குறித்த கள ஆய்வானது நேற்று (8) நடைபெற்றது.
இந்த கள ஆய்வின் போது தமிழர்களின் வாழ்வியல் தொடர்பான பல விதமான சட்டி ,பானை, ஓட்டுத் தண்டுகள் சேட் எனப்படும் கல் இரும்புத் தாது பெறக் கூடிய கற்கள் போன்ற பல சான்றுப் பொருட்கள் நிலத்தின் மேல் பகுதியில் மேலதிக ஆய்வுளகுள்ளாக எடுத்துக் கொள்ளப்பட்டது.
காணி பிரச்சினைகள்
இந்த தொல்லியல் கள ஆய்வில் முன்னாள் தொல்லியல் துறை விரிவுரையாளர் கந்தசாமி கிரிகரன், மன்னார் ஊடகவியலாளர் ஜெகன் மற்றும் இலுப்பைக்கடவை கிராமத்தைச் சார்ந்த பலரும் கலந்து கொண்டனர்.
இந்த தொல்லியல் கள ஆய்வு தொடர்பாக பேராசிரியர் புஸ்பரெட்ணம் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், “இரண்டு வாரங்களுக்கு முன்னர் மன்னார் சோழமண்டல குளத்தை பற்றியும் அங்குள்ள காணி பிரச்சினைகள் பற்றியும் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்திருந்தது.
நான்cப் பற்றி சிந்தித்ததை விட சோழமண்டல குளம் என்னும் பெயர் என்னை ஆச்சரியத்திற்கு உட்படுத்தியது.
கல்வெட்டு
ஏனென்றால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சோழர் இலங்கையை ஆட்சி செய்த காலத்தில் அவர்கள் மண்டலம்,நாடு ,வளநாடு பற்று என்று நிர்வாக பிரிவுகளை ஏற்படுத்தியே ஆட்சி செய்து வந்திருந்தார்கள்.
அதில் மாதோட்டம் அருண்மொழித் தேவ வளநாடு என்று அழைக்கப்பட்டதை மாதோட்டத்தில் கிடைத்த கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன.
தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பல்லவராயர் கல்வெட்டு மட்டிவாள் என்ற இடம் பற்றி சொல்லுகின்றது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.




