முல்லைத்தீவில் படையினரின் கண்காணிப்பு
அனைத்து மாவட்டங்களிலும் அமைதியை பேணுவதற்காக முப்படையினரை கடமைகளில் ஈடுபடுத்துவதற்கான அதிவிசேட வர்த்தமானி கடந்த 22 ஆம் திகதி ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 40 ஆம் அத்தியாயத்தின் 12 ஆம் பிரிவினால் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய (22.04.2023) திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் அமைதியை பேணுவதற்காக முப்படையினரும் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
ஒவ்வொரு மாதமும் தொடர்ச்சியாக இந்த வர்த்தமானி அறிவித்தல் புதுப்பித்து வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உந்துருளி படையணியினர்
இந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வீதிகளில் படையினரின் உந்துருளி படையணியினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளார்கள். (22.04.2023) அன்று புதுக்குடியிருப்பில் படையினரின் ஏற்பாட்டில் பாரிய புத்தாண்டு விழா ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த விளையாட்டு போட்டி நிகழ்வுகளை தொடர்ந்து இரவு இன்னிசை நிகழ்ச்சியும் படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இதில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டுள்ளார்கள்.
இரவு நிகழ்வில் கலந்துகொள்வதற்காக சென்ற மக்கள் அனைவரும் சோதனையிடப்பட்டு உள்நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
பாதுகாப்பு பலப்படுத்தல்
இராணுவத்தின் உயர் அதிகரிகள் பலர் கலந்துகொண்டதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் ஊடாக அறிய முடிகின்றது.
புதுக்குடியிருப்பில் மக்கள் பொழுதுபோக்கினை விரும்பியுள்ளமை இதில் கலந்துகொண்ட மக்கள் திரள் ஊடாக அறியமுடிகின்றது.
புலம்பெயர் அமைப்புக்கள் பல
இருந்தும் புதுக்குடியிருப்பில் தமிழ் சிங்கள புத்தாண்டினை முன்னிட்டு எந்த
ஒரு போட்டி நிகழ்வுகளும் நடத்தாமை கவலையளிக்கின்றது.




