கிளிநொச்சியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிய சந்தேகநபர்கள் கைது
கிளிநொச்சி-பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகாவில் பகுதியில் அனுமதிபத்திரமின்றி சட்டவிரோதமாக மணல் ஏற்றிய டிப்பர் வாகனங்களுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம் (22.04.2023) இடம்பெற்றுள்ளது.
மேலும், கிளிநொச்சி-பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகாவில் பகுதியில் அனுமதிபத்திரமின்றி சட்டவிரோதமாக மணல் ஏற்றிய இரண்டு டிப்பர் வாகனம் உட்பட அதன் சாரதிகளும் பளை விசேட அதிரடி பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸார் நடவடிக்கை

இதேவேளை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ள இரண்டு டிப்பர் வாகனங்கள் நாளை(24.04.2023 )கிளிநொச்சி நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளதாக பளை பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்
எதிர்நீச்சல் சீரியலில் ஜனனியாக நடிக்க ஒரு நாளைக்கு நடிகை VJ பார்வதி வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
ராஜினாமா செய்த ஜெயசூரியா: இந்தியாவிற்கு உலகக்கிண்ணத்தைப் பெற்று தந்தவரை நியமித்த இலங்கை News Lankasri