பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு
டெங்கு பரவலை தடுக்கும் நோக்கில் பாடசாலை மாணவர்களுக்கு அரசாங்கம் விசேட அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் இந்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பொருத்தமான ஆடைகள்
அதன்படி, பாடசாலை மாணவர்கள் டெங்கு நுளம்புக்கடியிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில், கைகள் மற்றும் கால்களை முழுமையாக மூடக்கூடிய பொருத்தமான ஆடைகளை அணிவதற்கு பாடசாலைகள் அனுமதி வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமான பாடசாலை சீருடையுடன் சேர்த்து, நுளம்புக்கடியிலிருந்து சிறந்த பாதுகாப்பை வழங்கும் வகையில் கைகள் மற்றும் கால்களை முழுமையாக மறைக்கும் ஆடைகளை அணிய மாணவர்களை அனுமதிக்குமாறு பள்ளி அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தர நிர்ணயங்களுக்குட்பட்ட நுளம்பு விரட்டிகளை பயன்படுத்துவது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துமாறும் அதிபர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
பாடசாலை மாணவர்களை டெங்கு நுளம்புக்கடியிலிருந்து பாதுகாப்பதே இந்த அவசர நடவடிக்கைகளின் முக்கிய நோக்கமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
என் அப்பா பார்த்துக்கொள்வார்; 3 பேரை கார் ஏற்றிக்கொன்ற பின் திமிராக பேசிய 19 வயது இளைஞர் News Lankasri
உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள்: பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி News Lankasri