வீட்டில் துப்பாக்கியை பதுக்கி வைத்திருந்த சஜித் அணியின் உறுப்பினர்.. வெளியான தகவல்
சட்டவிரோதமாகத் துப்பாக்கியை வைத்திருந்த குற்றச்சாட்டில், அம்பலாங்கொட பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் அமித் சத்துரங்க சமரநாயக்க, காலி மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகள்
நேற்று பத்தேகம, தித்தேலியாவில் உள்ள சந்தேகநபரின் வீட்டில் தங்கியிருந்த வேளையிலேயே அவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

நீண்டகாலமாகப் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட இந்தச் சோதனையின் போது, சந்தேகநபரிடம் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த ரிப்பீட்டர் ரக துப்பாக்கி ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
மாகாண சபைத்தேர்தல் தமிழர்களுக்கு ஒரு அபாய எச்சரிக்கை..! 16 மணி நேரம் முன்
சொதப்பிய மெஸ்ஸி: கடைசி நிமிடங்களில் மேஜிக்.. சுவிஸை வீழ்த்தி அர்ஜென்டினா அரையிறுதிக்கு முன்னேற்றம் News Lankasri