மன்னார் நகரசபை பிரிவில் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தற்காலிக வியாபார நிலையங்கள் அமைக்க இடம் ஒதுக்கீடு
மன்னாரில் நத்தார், புதுவருட பண்டிகைக்கால வியாபாரங்களை மேற்கொள்ள இம்முறை மன்னார் நகர சபை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கேள்விப்பத்திர அடிப்படையில் தற்காலிக வியாபார நிலையங்கள் அமைக்க மன்னார் நகர சபையினால் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இம்முறை மன்னார் நகர சபை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தற்காலிக வியாபார நிலையங்கள் அமைக்க இடம் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட வர்த்தகர்களிடம் மன்னார் நகர சபையினால் வியாபார நிலையங்களை பெற்றுக் கொள்ளக் கேள்விப்பத்திர அடிப்படையில் விண்ணப்பம் கோரப்பட்டது.
அதற்கமைவாக வியாபார நிலையங்களைப் பெற்றுக் கொள்ள பல நூற்றுக்கணக்கான வர்த்தகர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
வியாபார நிலையம் அமைக்க இடம்
இன்று வெள்ளிக்கிழமை (16.12.2022) காலை 10 மணியளவில் மன்னார் நகரசபை மண்டபத்தில் மன்னார் நகர சபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையில், மன்னார் நகர சபையின் செயலாளர், நகர சபையின் உறுப்பினர்கள், பணியாளர்கள் முன்னிலையில் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு ஒரு வியாபார நிலையத்தை பெற்றுக்கொள்ள ஆகக்கூடிய கேள்வித் தொகைக்கு விண்ணப்பித்த வர்த்தகருக்கு குறித்த வியாபார நிலையம் அமைக்க இடம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது விண்ணப்பித்திருந்த பல நூற்றுக்கணக்கான வர்த்தகர்களும் வருகை தந்திருந்தனர்.
பண்டிகைக் காலத்திற்கான தற்காலிக இடங்களைப் பெற்றுக்கொள்ளும் வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை அமைத்து எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
வியாபார நிலையங்களை பெற்றுக் கொள்ளுவோர் பிரிதொரு நபருக்கு வியாபார நிலைய
இடங்களைக் கைமாற்றும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
மேற்கொள்ளப்படும் என்பதோடு, குறித்த இடம் நகரசபையினால் மீளப் பெற்றுக்
கொள்ளப்படும் என மன்னார் நகர சபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் அறிவித்தார்.



விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் துரந்தர் திரைப்படம்.. என்று, எந்த நேரத்தில் ஒளிபரப்பாகிறது தெரியுமா? Cineulagam
வீடு பறிபோகும் பயம் இல்லாமல் மனோஜ் செய்த காரியம், வெளுத்து வாங்கிய விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
இரவு முழுவதும் விடிய விடிய கதறி அழுதுள்ள எதிர்நீச்சல் சீரியல் புகழ் ஹரிப்பிரியா... அப்படி என்ன நடந்தது? Cineulagam