விவசாயிகளுக்கான உர மானியம் வழங்கும் திட்டம் தொடர்பில் வெளியான தகவல்
விவசாயிகளுக்கு பெரும் போகத்திற்கான உர மானியங்களை வழங்குவதற்கான முதலாம் கட்ட பணிகள் நிறைவடைந்துள்ளதாக கமநல சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 23 மாவட்டங்களுக்கு 86,162 ஹெக்டயர் பயிர்ச்செய்கைக்கு உர மானியம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, நாடளாவிய ரீதியில் 129,229 விவசாயிகளுக்கு சுமார் 1.29 பில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக கமநல சேவைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
உர மானியம்
இதேவேளை,பயிர்செய்கைகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன என்பதன் அடிப்படையில் விவசாயிகளுக்கு உர மானியம் வழங்கப்படும் என கமநல சேவைகள் ஆணையாளர் நாயகம் ரோஹன ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவை மாவட்டத்தின் சில பகுதிகளிலுள்ள விவசாயிகளுக்கு கிரிதலை மற்றும் கௌடுல்ல நீர்த்தேக்கங்களில் இருந்து தாமதமாக நீர் திறந்து விடப்படுவதால் விவசாயிகளுக்கு இந்த மானியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மாட்டப்போகும் ஆனந்தி.. வில்லி கைக்கு போகும் ஸ்கேன் ரிப்போர்ட்! சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ Cineulagam
