ஆசிரியைகளுக்கு கடுமையான கட்டுப்பாடு! கல்வியமைச்சு அதிரடி அறிவிப்பு
பாடசாலை ஆசிரியைகள் புடவையை தவிர வேறு ஆடைகளை அணிந்து கடமைக்கு செல்ல முடியாது என்று அறிவுறுத்தும் சுற்றறிக்கையை அரச நிர்வாக அமைச்சு இன்று வெளியிடும் என கல்வியமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
புடவைக்கு பதிலாக வேறு ஆடைகளை அணிந்த ஆசிரியைகள்
சில பாடசாலைகளின் ஆசிரியைகள் புடவைக்கு பதிலாக வேறு உடைகளில் கடமைக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியதை கவனத்தில் கொண்டு அந்த சுற்றறிக்கை வெளியிடப்படுகிறது.
ஆசிரியைகள் பாடசாலைகளுக்கு கடமைக்கு செல்லும் போது புடவை அணிந்திருக்க வேண்டும் என்று கல்வியமைச்சு கொள்கை ரீதியாக முடிவை எடுத்துள்ளது. அந்த முடிவில் எந்த மாற்றங்களும் இல்லை எனவும் நிஹால் ரணசிங்க கூறியுள்ளார்.
அனைத்து அரச நிறுவனங்களிலும் பணிப்புரியும் பெண்கள் தமக்கு பொருத்தமான ஆடைகளை அணிந்து கடமைக்கு வர முடியும் என வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையை தன்னிச்சையாக மாற்ற நடவடிக்கை எடுத்தால், அதற்கு எதிராக நீதிமன்றத்திற்கு செல்ல போவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பெண்களின் ஆடைகள் குறித்து ஆண் முடிவு எடுப்பது கேலிக்குரியது
ஆசிரியர் தொழிலில் ஈடுபட்டு வரும் அனைத்து ஆசிரியைகளுக்கும் அல்ல, விரும்பு ஆசிரியைகள் தாம் விரும்பிய ஆடையில் பாடசாலைக்கு வர இடமளிக்கப்பட வேண்டும் என எமது சங்கம் கோரிக்கை விடுத்தது.
ஆண்கள் சிலர் இணைந்து பெண்களின் ஆடைகள் குறித்து முடிவை எடுப்பது கேலிக்குரிய விடயம் எனவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam
