சுற்று நிரூபத்திற்கு அமையவே ஆசிரியர்களின் ஆடைகள் மாற்றப்பட்டன! ஜோசப் ஸ்டாலின்
சுற்று நிரூபத்திற்கு அமையவே ஆசிரியர்களின் ஆடைகள் மாற்றப்பட்டதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆசிரியைகள் சாரி அல்லது வசதியான உடையணிந்து பாடசாலைக்கு செல்கின்றனர்.
சுற்று நிரூபம்
அரசாங்க ஊழியர்கள் வசதியான ஆடைகளை அணிந்து பணிக்கு செல்லக் கூடிய வகையில் அண்மையில் சுற்று நிரூபம் வெளியிடப்பட்டது.

இதன் அடிப்படையிலேயே ஆசிரியர்கள் வசதியான ஆடைகளை அணிந்து பாடசாலை செல்வதாகத் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்கள் எப்பொழுதும் சுற்றுநிரூபங்களுக்கு அமைய செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
விரும்பிய ஆடை
ஆசிரியர்கள் வசதியான ஆடை அணிந்து கடமைக்கு வர முடி முடியும் என சுற்றிநிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது எனவும், விரும்பினால் சாரியோ அல்லது வசதியான ஆடையையோ அணிந்து கடமைக்கு சமூகமளிக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறெனினும் ஆசிரியர்கள் தகாத முறையில் ஆடை அணிந்து கடமைக்கு சமூகமளிக்கப் போவதில்லை என ஜோசப் ஸ்டாலின் தெற்கு ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
ரோஹினிக்கு வந்த அதிர்ச்சி போன் கால், பதற்றத்தில் மொத்த குடும்பத்தினர்.... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam