ஊடகங்களை அச்சுறுத்திய பெண் பொலிஸ் உத்தியோகத்தர் குறித்து விசாரணை
ஊடகங்களை அச்சுறுத்திய பெண் பொலிஸ் உத்தியோகத்தர் தெடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த 8ஆம் திகதி கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் குறித்த சட்டமூலத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை பெண் பொலிஸ் உத்தியோகத்தர் அச்சுறுத்தியிருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் இலத்திரனியல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
குறித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
அந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடகவியலாளர் ஒருவரின் கமராவை தாக்கிய குறித்த பெண் உத்தியோகத்தர் பொலிஸ் பேருந்தில் ஏறி தப்பிச் செல்லும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

இந்த புகைப்படத்தில் விஜய்யுடன் இருக்கும் பிரபல நடிகர் யார் என்று உங்களுக்கு தெரியுமா? இதோ பாருங்க Cineulagam

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri
