மட்டக்களப்பில் பொலிஸாரின் சுற்றிவளைப்பில் பெண் கைது!
மட்டக்களப்பு- கல்லடியில் நீண்ட காலமாக இயங்கிய கசிப்பு விற்பனை நிலையத்தை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளதுடன் பெண் ஒருவரையும் கைது செய்துள்னனர்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(8.4.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, பெண்ணிடமிருந்து 105 போத்தல் கசிப்புடன் கைப்பற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது
மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான குழுவினர் நேற்று பகல் கல்லடி வேலூர் 4ஆம் குறுக்கு வீதியில் உள்ள வீட்டை முற்றுகையிட்ட போதே பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்தோடு, குறித்த பெண் வீட்டினை சுற்றி உயரமாக மதில் அமைத்து சிசிரி கமராக்களை பொருத்தி நீண்டகாலமாக கசிப்பு வியாபரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
முறைப்பாடுகள்
மேலும் பொலிஸார் வீட்டை முற்றுகையிடும் போது சிசிரி கமராவில் பார்த்து கொண்டதும் வீட்டின் கதவை மூடி வீட்டில் யாரும் இல்லாததுபோல வீட்டுக்குள் இருந்து கொண்டு பொலிஸார் போன பின்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இந்தப் பெண்ணுக்கு எதிராக பொதுக்கள் பொலிஸாரிடம் பல முறைப்பாடுகள் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.