கிளிநொச்சியில் வெட்டு காயங்களுடன் இரு இளைஞர்கள் மீட்பு - மூவர் கைது!
கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு அண்மித்த பகுதியில் வெட்டு காயங்களுடன் இரு இளைஞர்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (08.04.2026) இடம்பெற்றது.
இருவர் படுகாயம்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கிளிநொச்சி பொதுச்சந்தைக்கு அருகிலுள்ள அரசு செயலக விடுதியின் கட்டுமான பணிகளில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கிடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட இரு இளைஞர்கள் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.