சுவிட்சர்லாந்திற்கு விஜயம் செய்யும் இளஞ்செழியன்
இலங்கையில் இனங்களுக்கிடையே இன முரண்பாடு முற்றி உச்சக்கட்டத்தில் போர்நடைபெற்ற காலத்திலும் இலங்கையின் வடபகுதியைச்சேர்ந்த ஈழத்தமிழன் ஒருவன் தென்பகுதிச்சிங்களமக்களாலும் முன்னாள் மாவட்ட மேல்நீதிமன்ற நீதிபதி மாண்புறு மாணிக்கவாசகர்இளஞ்செழியன் மிகவும் உயர்வாக மதிக்கப்பட்டவர்.
அவரை புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் ஈழத்தமிழர்கள் தாங்கள் வாழும் நாடுகளுக்கு அழைத்து பாராட்டு விழாக்களைச்செய்து மனநிறைவு கண்டு வருகின்றார்கள்.
இளஞ்செழியனுக்கு பாராட்டுவிழா
அந்தவகையில் சுவிட்சர்லாந்தில் முன்னாள் மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனுக்கு சேவைநலன் பாராட்டுவிழா இடம்பெறவுள்ளது.
குறித்த விழா, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை Bollingen Strasse 111இல் நடைபெறவுள்ளது.
சுவிஸ் வாழ் வேலணை ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.
அனைவருக்கும் அழைப்பு
இந்தநிகழ்வில், கலந்துகொள்ள சுவிட்சர்லாந்தில் வசிக்கும் அன்புறவுகள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் மூத்த ஊடகவியலாளர், அருட்சுனையர், ஆன்மீகப்பணியக மையம் நிறுவனர், ஆசிரியர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், தொழிலதிபர்கள், வணிகர்கள், உயர்நோக்க குமுகாயப்பணியாளர்கள், இசைக்கலைஞர்கள், முன்னாள் நீதிபதியின் நண்பர்கள் எனப் பலரும் கலந்துகொள்கின்றார்கள்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |