சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதற்கு முழு ஆதரவு : சம்பந்தன்
தேசிய பிரச்சினைகள் தீர வேண்டுமெனில் சர்வகட்சி அரசாங்கம் மிகவும் அவசியம், இதற்கு எமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
சர்வகட்சி அரசாங்கம் அமைக்க ஆதரவு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுப்பிய கடிதம் தொடர்பில் வினவியபோதே அவர் இக்கருத்தை தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
சர்வகட்சி அரசாங்கம்
"சர்வகட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். நேற்று முன்தினம்தான் அவரின் கடிதம் வந்தது. அந்தக் கடிதத்துக்கு தாம் இன்னமும் பதில் அளிக்கவில்லை.
எனினும், சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி நடத்தவுள்ள மாநாட்டில் தாம் பங்கேற்பதாகவும் தம்மால் இயன்ற அனைத்து ஒத்துழைப்பையும் வழங்குவோம்.
நாட்டினுடைய பிரச்சினை, நாட்டு மக்களுடைய பிரச்சினை தீர வேண்டுமெனில் சர்வகட்சி அரசாங்கம் மிகவும் அவசியம். இதற்கு எமது பரிபூரண ஒத்துழைப்பை வழங்குவோம்.
பிரச்சினைகள்
பொருளாதாரப் பிரச்சினை மாத்திரமல்ல அரசியல் பிரச்சினைகள், சமூகப் பிரச்சினைகள் எனச் சகல தேசிய பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்கு எம்மால் இயன்ற ஒத்துழைப்பை சர்வகட்சி அரசாங்கத்திற்கு வழங்குவோம்.
ஏனெனில் ஒரு பிரச்சினையைத் தீர்த்து மற்றைய பிரச்சினைகளைத் தீர்க்காதுவிட்டால் நாட்டில் முன்னேற்றம் ஏற்படாது.
எனவே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண ஜனாதிபதிக்கும் அவர் தலைமையில் அமையவுள்ள
சர்வகட்சி அரசாங்கத்திற்கும் நாங்கள் முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம்'' என தெரிவித்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

இலங்கை தொழிலதிபரின் மனைவி ரம்பா கொடுத்த சர்ப்ரைஸ்! கணவர் இறப்பிற்கு பிறகு சிரித்த முகத்துடன் மீனா Manithan

ஸ்டெம்பில் இருந்து விலகி சிக்சர்களை விளாசிய ஹர்திக் பாண்டியா! கலங்கி நின்ற எதிரணியினர் வீடியோ News Lankasri

ஆண் நண்பருடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட புகைப்படம்! வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள் Manithan

4 ஆவது முறையாக தாத்தாவான ரஜினி! சௌந்தர்யா மீண்டும் கர்ப்பம் - உச்சக்கட்ட மகிழ்ச்சியில் குடும்பம் Manithan

இலங்கையில் நடைபெற்ற திருமணம்! கனடாவில் உயிரிழந்த இலங்கையர் குறித்து உருக்கமாக பேசிய மனைவி News Lankasri

கணவர் இறப்பிற்கு பிறகு மீனா எடுத்துக் கொண்ட புகைப்படம்- யாரை சந்தித்து எடுத்துள்ளார் பாருங்க Cineulagam

ஷங்கரின் மகள் அதிதியால் ஏமாற்றத்திற்கு ஆளான சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி ! விருமன் பட சர்ச்சை Cineulagam

நாங்கள் வந்து உங்கள் அனைவரையும் கொன்றுவிடுவோம்... தொலைக்காட்சியில் நேரடி மிரட்டல் விடுத்த புடின் ஆதரவாளர் News Lankasri

பிக்பாஸ் 6 உள்ளே செல்லும் 5 போட்டியாளர்கள் உறுதி! இந்த நடிகரும் செல்கிறாரா? கசிந்த அப்டேட்! Manithan
