ஒன்லைன் வகுப்பிற்கு செல்லாத மாணவனை அடித்துக் கொன்ற தந்தை
தென்னிலங்கையில் தந்தை ஒருவர் மகனை படிப்பதற்காக கண்டித்தமையினால் ஏற்பட்ட காயம் காரணமாக மகன் உயிரிழந்துள்ளார்.
காலி, மஹமோதர, சியம்பலாஹேன பிரதேசத்தை சேர்ந்த கிம்ஹான் விமுக்தி என்ற மாணவனே உயிரிழந்துள்ளார். அவர் இம்முறை சாதாரண பரீட்சைக்கு ஆயத்தமாக இருந்தவராகும்.
குறித்த மாணவன் சில மாதங்களாக ஒன்லைன் கற்கை நடவடிக்கைகளில் ஈடுபடாமையினால் தந்தை கண்டித்துள்ளார்.
கோபம் காரணமாக மகனின் முதுகின் மீது துடைப்பத்தால் அடிக்க அடிக்க தந்தை முயற்சித்த போது அதனை தவிர்க்க மகன் முயற்சித்துள்ளார். இதன் போது அந்த தாக்குதல் அவரது தலையில் விழுந்தமையினால் மகன் காயமடைந்துள்ளார்.
காயமடைந்த மகன் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு அவர் உயிரிழந்துள்ளார்.
தனது மகனை மிகவும் அன்பாக வளர்த்த தந்தை, கல்வி நடவடிக்கை இடைநடுவில் நின்றுவிடும் என்ற அச்சத்திலேயே தாக்கியுள்ளார் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 மணி நேரம் முன்

துபாயில் சிறையில் இருந்து விடுதலையான 19 வயது பிரித்தானிய இளைஞர்: லண்டன் சாலையில் சோகம் News Lankasri

கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்.. கடை திறப்பு விழாவில் அதிர்ச்சி! வைரல் வீடியோ Cineulagam

உறுதியான பிக் பாஸ் 9 போட்டியாளர்கள் லிஸ்ட்! வாட்டர் மெலன் ஸ்டார் முதல் விக்கல்ஸ் விக்ரம் வரை.. Cineulagam

காரை நிறுத்திய பொலிசாரிடம் மனைவிக்கு பிரசவ வலி என்று கூறிய பிரித்தானியர்: தெரியவந்த உண்மை News Lankasri
