மகனை சுட்டுக் கொலை செய்ய முயன்ற தந்தை துப்பாக்கியுடன் கைது
புத்தளத்தில் தனது மகனை சுட்டுக் கொலை செய்ய முயன்ற தந்தை ஒருவர் ஆரச்சிகட்டுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நபர் நேற்று மதியம் ஆரச்சிகட்டுவ அத்தனங்க பகுதியில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட நபர் தொடுவாவை சேர்ந்த 65 வயதுடையவராகும்.
சந்தேக நபரிடமிருந்து உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் 12 தோட்டாக்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
தந்தை கைது
சந்தேக நபர் பல ஆண்டுகளுக்கு முன்பு தனது பிள்ளை மற்றும் மனைவியை கைவிட்டு மற்றுமொரு பெண்ணுடன் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் சந்தேக நபர் ஆரச்சிகட்டுவக்கு திரும்பியதுடன், அத்தங்கனை பகுதிக்கு வந்து தனது மனைவி மற்றும் மகனுடன் மீண்டும் வாழ விரும்புவதாகக் கூறியுள்ளார்.
பொலிஸார் விசாரணை
4 வயதில் தன்னையும் தாயையும் விட்டுச் சென்ற தந்தை 31 ஆண்டுகளுக்கு பிறகு திரும்பி வந்ததனை மகன் எதிர்த்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மகனின் எதிர்ப்பு காரணமாக சந்தேகநபரான தந்தை அவரை கொலை செய்ய முயன்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆராச்சிகட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





Gen Z போராட்டக்காரர்களுடன் இணைந்த ராணுவம் - நேபாளத்தையடுத்து மற்றொரு நாட்டில் ஆட்சி கவிழ்ப்பு? News Lankasri

ஜெயிலர் 2 இன்னும் ரிலீஸ் ஆகல.. அதுக்குள்ள ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு! என்ன தெரியுமா Cineulagam
