இலங்கையில் பெரும் சோகம்: தந்தையும் மகனும் பரிதாபமாக மரணம்
இலங்கையில் வெசாக தினத்தை முன்னிட்டு தானசாலை ஏற்பாடுகளை செய்த தந்தையும் மகனும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கம்பளை, புப்புரஸ்ஸ பகுதியில் தானசாலைகளை அமைந்து விட்டு நித்திரைக்கு சென்ற தந்தையும், மகனும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
அந்தப் பகுதியில் திடீரென இரவு மின்சாரம் தூண்டிக்கப்பட்டதால், மின் பிறப்பாக்கிமூலம் மின்சாரம் பெறப்பட்டுள்ளது.
தந்தையும் மகனும் மரணம்
தமது கடமைகளை முடித்துக் கொண்டு அதிகாலை 2.30 மணியளவில் நித்திரைக்கு சென்ற நிலையில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் 40 வயது தந்தையும், 17 வயது மகனும் உயிரிழந்துள்ளனர். திடீரென மின்பிறப்பாக்கி இயங்காமல் போனதால் இதை பார்ப்பதற்கு அங்கு உள்ள இளைஞர்கள் சென்றுள்ளனர்.
கிராமிய வைத்தியசாலை
இதேவேளையில் நித்திரை கொண்டு இருந்தவரின் முகத்தில் கரப்பான் பூச்சி கடிப்பதை பார்த்த இளைஞர் ஒருவர் அவரை தட்டி எழுப்பி உள்ளார், ஆனால் அவர் மூச்சு பேச்சு அசைவும் இல்லாத நிலையில் காணப்பட்டுள்ளார்.

உடனடியாக புப்புரஸ்ஸ பன்விலதென்ன கிராமிய வைத்தியசாலைக்கு இருவரையும் கொண்டு சென்ற போதும், ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
மின்பிறப்பாக்கி இயந்திரத்தில் இருந்து வெளியேறிய காபன்மொனக்சைட் என்ற நச்சுத்தன்மையுடைய வாயுவை சுவாசித்ததனாலேயே இருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 


                                            
                                                                                                                                    
    
    
    
    
    
    
    
    
    
    திடீரென பழனிவேல் செய்த காரியம், கண்ணீர்விட்டு அழுத கோமதி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam