தந்தை செல்வாநாயகத்தின் 125 ஆவது ஜனன தினம்
தந்தை செல்வாநாயகத்தின் 125 ஆவது ஜனன தினம் நேற்று (18) காலை 10:30 மணியளவில் ஹட்டன் பழைய கிருஸ்ண பவன் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.
மலையக உரிமைக்காக போராடியவர்களுக்காக ஈகை சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டு மலையகத்திற்க்காக முதன்மை குரல் எழுப்பிய தந்தை செல்வநாயகம் அவர்களின் 125 ஆவது நினைவு நிகழ்வுகள் ஆரம்பமாகின.
ஜனன தின நிகழ்வு
வரவேற்பு உரை தலைமை உரை என்பவற்றை தொடர்ந்து நினைவுரைகளை தந்தை செல்வா பேரனார் சா.செ.ச இளங்கோ, மலையக பேராசிரியர் விஜயசந்திரன், மலையக மக்கள் முன்னணி தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன், வடக்கு கிழக்கும் மலையகமும் எனும் தலைப்பில் அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி கனகராஜ் சமூக செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான இரா.சுப்பிரமணியம், மலையகமும் பெண்களும் எனும் தலைப்பில் திருமதி ஜீவா சதாசிவம் ஆகியோர் நினைவு பேருரைகளை நிகழ்த்தினர்.
மேலும் இந்த நிகழ்வில் மலையக தொழில் சங்கவாதிகள், சமூக ஆர்வலர்கள், அரசியல் பிரதிகள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

சீனி மற்றும் சம்பா அரிசிக்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்திய அரசாங்கத்தின் நடவடிக்கை - செய்திகளின் தொகுப்பு


நல்லூர் கந்தசுவாமி வெள்ளி, சக கிடாய் வாகன உற்சவம்




