அமைச்சர் ரொஷான் ரணசிங்க நியமித்த இடைக்கால குழு : நாளை பரிசீலனை
அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் நியமிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட்டின் இடைக்கால நிர்வாகத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றின் புதிய அமர்வு பரிசீலிக்கவுள்ளது.
இந்த நீதிப்பேராணை கோரிய மனுவின் விசாரணையில் இருந்து முன்னதாக நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் டி.என். சமரக்கோன் உட்பட்ட நீதியரசர்கள் விலகிக்கொண்டனர்.
நட்ட ஈடு கோரிய ஷம்மி
இதனையடுத்து மனுவை விசாரணை செய்ய நான்காவது புதிய அமர்வு நியமிக்கப்பட்டு, அது நாளை மனுவை பரிசீலிக்கவுள்ளது.
இந்த மனுவை இலங்கை கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வா தாக்கல் செய்துள்ளார்.
கிரிக்கெட் நிர்வாகத்துக்கு எதிராக அமைச்சர் இடைக்கால தடையை விதித்தமை அவதூறான செயல் என்று தீர்ப்பளிக்கக்கோரியே அவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இதற்காக அவர் 4 பில்லியன் ரூபாய்களை நட்டஈடாக கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |