தமிழ் - சிங்கள ஆயர்களுக்கிடையில் பெரும் பிளவு : திடுக்கிடும் தகவல்கள் பல...
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற மே18 நினைவேந்தல் நாளிலே, இறுதி யுத்தத்தின் போது இன அழிப்பு அல்லது இனப்படுகொலை இடம்பெற்றது என அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் குறிப்பிட்டிருந்தார்.
இந்தக் கருத்துக்களை இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையும் இலங்கையின் கத்தோலிக்க திருச்சபையும் வன்மையாகக் கண்டித்தது.
இந்நிலையில் முள்ளிவாய்க்காலில் நடந்தது இனப்படுகொலைதான் அதனை நிரூபிக்க முடியும் என யாழ்.கத்தோலிக்க நீதி சமாதான ஆணைக்குழுவின் முன்னாள் இயக்குநரும் தற்போது கனடாவில் வசிக்கும் அருட்தந்தை பேர்னார்ட் அல்பொன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தென்னிலங்கையிலே சிங்கள பகுதியைச் சேர்ந்த ஆயர்கள் ஒரு பக்கமும் தமிழ் பகுதியைச் சேர்ந்த ஆயர்கள் இன்னொரு பக்கமும் இருக்கின்றார்கள்.
இரண்டிற்கும் இடையே பெரும் பிளவு உள்ளது. ஆகவே அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் குறிப்பிட்ட கருத்தை தமிழ் ஆயர்கள் பேரில் சேர்க்க வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் பல விடயங்களை ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி.....