தமிழர் பகுதியில் மருமகனின் தாக்குதலில் மாமனார் பலி!
கிளிநொச்சி அக்கராஜன் குளம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட ஸ்கந்தபுரம் பகுதியில் மருமகனின் தாக்குதலுக்கு இலக்காகி மாமனார் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்றுமுன்தினம்(24) இரவு இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், மகளை மருமகன் தாக்க முற்பட்ட போது அவர் தந்தை வீட்டிற்கு தப்பியோடி வந்துள்ளார்.
உயிரிழப்பு
இந்தநிலையில் மகளை தாக்க முற்பட்ட. மருமகனை தடுக்க முற்பட்டவேளை மருமகனின் தாக்குதலுக்குள்ளான நிலையில் மாமனார் வைத்தியசாலை கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் 59 வயதான கதிரவேலு சிவராசசிங்கம் என்பவரே உயிரிழந்துள்ளதுடன் 25வயதுடைய மருமகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருடன் சேர்ந்து குறித்த சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் அவரது சிறிய தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணை
சம்பவம் தொடர்பாக அக்கராஜன் குளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்தவர்களின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க கப்பல்களை அருகே சென்று படம்பிடித்த ட்ரோன்கள் - ஈரான் முற்றுகையில் நடக்கும் அதிசயங்கள் News Lankasri
ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam