அருட்தந்தை சிறில் காமினி தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல்
அருட் தந்தை வணக்கத்துக்குாிய சிறில் காமினியை தற்போதைய நிலையில் கைது செய்யப்போவதில்லையென குற்றபுலனாய்வுத் துறையினர் உயர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.
சட்டமா அதிபரின் ஊடாக இந்த தகவல் உயர் நீதிமன்றத்துக்கு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தம்மை கைது செய்யக்கூடாது என்று கோரி அருட்தந்தை சிறில் காமினி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவின் விசாரணை இன்று இடம்பெற்ற போதே குற்றபுலனாய்வு துறையினர் இந்த அறிவித்தலை வெளியிட்டனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அரசப்புலனாய்வு துறையின் தலைவர் மீது குற்றம் சுமத்தியதாக கூறப்பட்டு அருட்தந்தை சிறில் காமினிக்கு எதிராக அரசப் புலனாய்வு பிரிவின் தலைவர் குற்றப்புலனாய்வு துறையில் முறைப்பாடொன்றை செய்துள்ளார்.
இந்த முறைப்பாட்டை அடுத்து அருட்தந்தை சிறில் காமினி உயர் நீதிமன்றத்தில் தடையுத்தரவு மனுவை தாக்கல் செய்திருந்தாா்.
இந்தநிலையில் அருட்தந்தை சிறில் காமினியை கைதுசெய்யக்கூடாது என்றுகோாி, இன்று நீதிமன்ற முன்றலில் ஆா்ப்பாட்டம் ஒன்றும் நடத்தப்பட்டது.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri
