வவுனியாவில் 14 வயது சிறுமியை தகாத உறவுக்குட்படுத்திய தந்தை
வவுனியா, தோணிக்கல் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 14 வயது சிறுமி ஒருவரிடம் தகாத முறையில் நடந்துகொண்டமை தொடர்பில் சிறுமியின் 36 வயதுடைய தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி நேற்றைய தினம் (21.03) பாடசாலைக்கு சென்று தனது சக மாணவி ஊடாக தான் தகாத உறவுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தை ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
இதனையடுத்து, குறித்த விடயம் தொடர்பில் பாடசாலையினால் வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, துரிதமாக செயல்பட்ட பொலிஸார் சிறுமியை விசாரணை செய்ததில், சிறுமியின் தாய் வீட்டில் இல்லாத போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தையான 36 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சிறுமி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய சிறுவர், பெண்கள் பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 10 மணி நேரம் முன்

ட்ரம்புக்கு விடுக்கப்பட்ட பகிரங்க கொலை மிரட்டல்... எதற்கும் தயார் நிலையில் ஈரான் இராணுவம் News Lankasri

SBI சேமிப்பு திட்டத்தில் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்து ரூ.32 ஆயிரம் வட்டியை பெறலாம்.., என்ன திட்டம் தெரியுமா? News Lankasri

சன் டிவியில் தமிழ் புத்தாண்டுக்கு வரப்போகும் படம்.. விஜய் டிவிக்கு போட்டியாக அதிரடி அறிவிப்பு Cineulagam
