மஸ்கெலியாவில் மூன்று பிள்ளைகளின் தந்தை மாயம்! தேடும் போது கிடைத்த முக்கிய ஆதாரங்கள்
மஸ்கெலியா, பிரவுன்லோ பகுதியே சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையை காணவில்லை என மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அவர் தேடப்பட்டு வந்த நிலையில் அவரது ஆடை மற்றும் பாதணிகள் மவுசாகலை ஆற்றின் கரையோரத்தில் காணப்பட்ட நிலையில் ஆற்றில் தேடும் பணி இடம்பெற்று வருகிறது.
பொலிஸ் நிலையம்
மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரவுன்லோ பகுதியை சேர்ந்த வேலு மருதமுத்து(55) என்ற நபரை நேற்றுமுன்தினம் (06) காலை முதல் காணவில்லை என மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்படுள்ளது.
இந்த நிலையில் நேற்று ( 07) பிரதேச மக்கள் தேடும் பணியில் ஈடுட்டபோது நீர்தேக்க கரையோரத்தில் குறித்த நபர் அணிந்திருந்ததாக கூறப்படும் ஆடை, தொப்பி மற்றும் காலணிகள் கிடப்பதை கண்டுள்ளனர்.
பிரதேச மக்கள் சந்தேகத்தில் மவுசாகலை நன்நீர் மீன் பிடி தொழிலாளர்களின் உதவியுடன் ஆற்றில் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் ஆடைகள் கிடந்த இடத்தில் EPF என்றும் மண்ணில் எழுத்தப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.




நல்லூர் கந்தசுவாமி கோவில் 11 ஆம் நாள் திருவிழா





இந்தியா-ரஷ்யா புதிய ஒப்பந்தம்: ரயில்வே, அலுமினியம், சுரங்க தொழில்நுட்பங்களில் கூட்டு முயற்சி News Lankasri

கனடா நிலப்பரப்புக்கு அடியில் உறங்கிக்கொண்டிருக்கும் பயங்கர அபாயம்: எச்சரிக்கும் ஆய்வாளர்கள் News Lankasri

நடிகர் சூர்யாவின் பிள்ளைகள் தனது Pocket-Money-யை என்ன செய்கிறார்கள்? சித்தப்பா கார்த்தி கூறிய உண்மை Manithan
