தீர்த்தக்கரைப் பகுதியில் காணாமல் போன கடற்றொழிலாளர்.. ரவிகரன் எம்பி கோரிக்கை
முல்லைத்தீவு - தீர்த்தக்கரைப் பகுதியிலிருந்து கடந்த ஜூன் மாதம் கடற்றொழிலுக்குச் சென்ற வின்சன்ரிப்போல் அன்ரனிகர்னல் என்னும் கடற்றொழிலாளர் காணாமல் போயிருந்தார்.
இந்நிலையில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாட்டில் ஈடுபடுபவர்களால் குறித்த கடற்றொழிலாளர் திட்டமிட்டு காணாமல் போகச்செய்யப்பட்டிருக்கலாமென சந்தேகிப்பதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.
முல்லைத்தீவு கடற்பரப்பில் அதிகரித்துள்ள சட்டவிரோத கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை முல்லைத்தீவு கடற்பரப்பில் இடம்பெறும் சட்டவிரோதிகளின் அத்துமீறல் செயற்பாடுகளை உரியதரப்பினர் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காதமை தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், "முல்லைத்தீவில் கடந்த 2025.06.19 அதிகாலை 02.30 மணியளவில் கடலுக்கு தொழிலுக்கச்சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தையான வின்சன்ரிப்போல் அன்ரனிகர்னல் என்பவரைக் காணவில்லை. தனது குடும்ப வாழ்வாதாரத்திற்கே கடலுக்குச் சென்றுள்ளார்.
படகு மீட்பு
அவர் கடலுக்குச்சென்ற படகு மீட்கப்பட்டபோது அதில் இரத்தக்கறை இருந்துள்ளதுடன், படகிலும், படகின் வெளியிணைப்பு இயந்திரத்திலும் சிறிய அளவில் சேதமடைந்ததற்கான அடையாளங்களும் இருந்துள்ளன. படகில் இனங்காணப்பட்ட இரத்தக்கறையானது மனிதனுடையதென தடையவியல் நிபுணர்களாலும் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் காணாமல் போன குறித்த கடற்றொழிலாளர் கடலில் சட்டவிரோத தொழிலில் ஈடுபடுபவர்களால் தாக்கப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் கடற்றொழிலாளர் மக்களிடமுள்ளது.
முல்லைத்தீவுக் கடற்பரப்பு சட்டவிரோதிகளின் கைகளிலேயே உள்ளது. இரவில் இடம்பெறும் வெளிச்சம்பாச்சி கடற்றொழிலில் செயற்பாட்டால் கடல்முழுவதும் பகல்போல் தென்படுகின்றது.
இவ்வாறு முல்லைத்தீவுக் கடற்பரப்பில் சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ளநிலையில், அந்த சட்டவிரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தவேண்டியவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
கடற்படையினர், பொலிசார், கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களம் உள்ளிட்ட தரப்பினரால் ஏன் இத்தகைய சட்டவிரோத செயற்பாட்டைக் கட்டுப்படுத்தமுடியவில்லை” எனவும் கேள்வியெழுப்பினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 11 ஆம் நாள் திருவிழா





ஈஸ்வரி குறித்து கொற்றவையிடம் தர்ஷினி கூறிய உண்மை, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

இந்தியாவை கல்லறை என விமர்சித்துள்ள சீன ஊடகம் - இரு நாடுகளின் உறவை மேம்படுத்த வலியுறுத்தல் News Lankasri

இந்தியா-ரஷ்யா புதிய ஒப்பந்தம்: ரயில்வே, அலுமினியம், சுரங்க தொழில்நுட்பங்களில் கூட்டு முயற்சி News Lankasri
