அருட்தந்தை சிறில் காமினி, குற்றப்புலனாய்வுத் துறையில் சமுகம் தரமாட்டார்
தேசிய கத்தோலிக்க குழுவின் உறுப்பினரும், கத்தோலிக்க சபையின் பேச்சாளருமான அருட்தந்தை வணக்கத்துக்குரிய சிறில் காமினி, இன்று குற்றப்புலனாய்வுத்துறையில் சமுகம் தரமாட்டார் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அவரின் சட்டத்தரணிகள், குற்றப்புலனாய்வுத்துறையினருக்கு அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விடயம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளமையால், உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தின் பின்னரே, அருட்தந்தை சிறில் காமினி, குற்றப்புலனாய்வுத் துறையில் முன்னிலையாவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிா்த்த ஞாயிறுத்தாக்குல்கள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்றின்போது, தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவா் சஹ்ரான் ஹாசிமுடன் அரசப்புலனாய்வு பிரிவின் தலைவர் சுரேஸ் சாலி, தொடர்புகளைக் கொண்டிருந்தார் என்ற தகவலை அருட்தந்தை சிறில் காமினி தொிவித்ததாக கூறி, குற்றப்புலனாய்வுத்துறையில் முறையிடப்பட்டுள்ளது.
அருட்தந்தையின் கருத்து தமது அவதூறை ஏற்படுத்தியுள்ளதாகவும் தமது உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாகவும் சாலி தமது முறைப்பாட்டில் தொிவித்துள்ளார்.
இதனையடுத்தே அவரை இன்று குற்றப்புலனாய்வுத்துறையில் சமுகம் தருமாறு கோரப்பட்டிருந்தது.