யாழில் மாணவியிடம் தகாத செயலில் ஈடுபட்ட இராணுவ வீரருக்கு நேர்ந்த கதி
யாழ். வசாவிளான் பகுதியில் வீதியில் சென்ற பாடசாலை மாணவியிடம் அங்க சேஷ்டையில் ஈடுபட்டதாக கூறப்படும் இராணுவ வீரரை அப்பகுதி மக்கள் நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இச்சம்பவம் இன்றைய தினம் (22.05.2023) மதியம் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத் தினமாக இன்றைய தினம் தனிமையில் சென்ற பாடசாலை மாணவியை பின்தொடர்ந்து சென்ற குறித்த இராணுவ வீரர், அவரிடம் அங்க சேஷ்டையில் ஈடுபட்டுள்ளார் என பொலிஸ் விசாரணையில் தெரிவிக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளனார்.

விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸார்
குறித்த சம்பவத்தின்போது மாணவி குரலெழுப்பிய நிலையில், அங்குக் கூடிய பொதுமக்கள் குறித்த இராணுவ வீரரை நையப்புடைத்து பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.
தமிழ் இராணுவ வீரரான குறித்த நபர் கடந்த காலத்திலும் இவ்வாறான சில்மிஷங்களில் சிக்கியிருந்தாரெனக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் பலாலிப் பொலிஸார் மற்றும் இராணுவப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW |
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam
பிக்பாஸ் 9 வீட்டில் இருந்து வெளியேறியுள்ள கனி மொத்தமாக வாங்கிய சம்பளம்... எவ்வளவு தெரியுமா? Cineulagam