மன்னாரில் பாடசாலை மாணவி மாயம்! பெற்றோர் விடுத்துள்ள கோரிக்கை(Photos)
மன்னார்-முசலி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பண்டாரவெளி,மணற்குளம் என்ற முகவரியில் வசிக்கும் மாணவியொருவர் காணாமல் போயுள்ளதாக அவரின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
ரிகாஷா (வயது- 15) என்ற மாணவியே நேற்று (18.05.2023) காலையில் இருந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவி பண்டாரவெளி முஸ்லிம் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி கற்று வருவதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
மாணவி பற்றிய தகவல்கள்

மாணவி காணாமல் போனது தொடர்பாக நேற்றும், இன்றும் தேடிய பெற்றோர் மாணவி பற்றிய தகவல்கள் கிடைக்காததை தொடர்ந்து சிலாவத்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்நிலையில் இன்றையதினம் (19.05.2023) சிலாவத்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதாக மாணவியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த மாணவி பற்றிய தகவல்கள் தெரிந்தவர்கள் 074-2614797 எனும் மாணவியின் தந்தையின் தொலைபேசிக்கு தகவல்களை தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
You may like this video
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan
எதையும் தொடங்கல, எல்லாத்தையும் முடிச்சாச்சு, குணசேகரன் கொடுத்த ஷாக்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
Tamizha Tamizha: விதவை தாய்க்கு தலையில் பூ வைத்து அழகுபார்த்த மகன்! அரங்கமே கண்கலங்கிய தருணம் Manithan