நுவரெலியாவில் கோர விபத்து : நேருக்கு நேர் மோதிய இரு வாகனங்கள்
நுவரெலியா - உடப்புசல்லாவ பிரதான வீதியில் ராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புரூக்சைட் பகுதியில் லொறியொன்றும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தானது இன்று (20.09.2025) இடம்பெற்றுள்ளது.
முந்தி செல்வதற்கு முயற்சித்த போது
விபத்தில் பலத்த காயமடைந்த லொறியின் சாரதி நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ராகலை பகுதியில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த லொறி அதே திசையில் பயணித்த பேருந்து ஒன்றை முந்தி செல்வதற்கு முயற்சித்த போது நுவரெலியாவிலிருந்து ராகலை நோக்கி எதிர் திசையில் பயணித்த தனியார் பேருந்துடன் நேருக்கு நேர் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.
குறித்த விபத்தில் தனியார் பேருந்தும் லொறியும் பாரியளவு சேதத்திற்கு உள்ளாகியுள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




