தொடருந்தில் இருந்து மீட்கப்பட்ட மர்மப் பொதி : அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி
கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு தொடருந்தில் கடத்திவரப்பட்ட 200 கிராம் போதைப்பொருள் அடங்கிய கைவிடப்பட்ட பை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பையானது நேற்று(19.09.2025) மாலை மட்டக்களப்பு வந்தடைந்த தொடருந்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கை
கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பிரயாணித்து மட்டக்களப்பு தொடருந்து நிலையத்தை சம்பவ தினமான நேற்று(19) மாலை 4.10 மணிக்கு வந்தடைந்த தொடருந்தில் கைவிடப்பட்ட பை ஒன்றை தொடருந்து பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த பையை அங்கிருந்து மீட்டு தொடருந்து அதிபரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கைவிடப்பட்ட பை யாருடையது என அறிய பையைத் திறந்தபோது அங்கு போதைப்பொருள் கிடப்பதை கண்டு பொலிசாருக்கு அறிவித்தனர்.
குறித்த பையைத் திறந்தபோது அதில் பொதி செய்யப்பட்ட 252 பக்கெட்டுக்களை கொண்ட 200 கிராம் ஜஸ் போதைப்பொருளை மீட்டுள்ளனர்.
இவ்வாறு கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட போதைப்பொருளை நீதிமன்றில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



