மகிந்தவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் : பதறும் சாந்த பண்டார
விடுதலைப்புலிகள் அமைப்பு ஆயுத ரீதியில் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும், பிரிவினைவாத சிந்தனையுள்ள பலரால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளது என முன்னாள் பிரதி அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது, "இலங்கையின் 5ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான மகிந்த ராஜபக்ச, அரச வதிவிடத்தில் இருந்து வெளியேறியமை தொடர்பில் பலரும் பலகோணங்களில் கருத்துக்களை வெளியிடுகின்றனர்.
மகிந்தவுக்குப் பாதுகாப்பு வழங்குவதில்
மகிந்த ராஜபக்ச என்பவர் அரசியல்வாதி மட்டும் அல்ல. இந்த நாட்டில் நிலவிய 30 வருடகால போரை முடிவுக்குக் கொண்டு வந்த தலைவர். சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணியாமல் நாட்டுக்காகத் தனது பொறுப்பைச் சரிவர நிறைவேற்றியவர்.

மகிந்தவுக்கு மூன்று மகன்மார் உள்ளனர். அவர்களால் மகிந்தவைப் பார்த்துக்கொள்ள முடியாதா? என்று சிலர் கேட்கின்றனர்.
தனது தந்தையை பார்த்துக்கொள்ளும் இயலுமை நாமலுக்கு உள்ளது. எனினும், பிரிவினைவாதப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த மகிந்தவுக்குப் பாதுகாப்பு வழங்குவதில்தான் பிரச்சினை உள்ளது.
நாட்டை அராஜக நிலைக்கு
விடுதலைப்புலிகள் அமைப்பு ஆயுத ரீதியில் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும் பிரிவினைவாத சிந்தனையுடையோர் இன்னும் இருக்கின்றனர்.

இந்த நாட்டை அராஜக நிலைக்குக் கொண்டு செல்ல முற்படுகின்றனர். அதனால்தான் அரகலய காலத்தில்கூட நிதி வாரி வழங்கப்பட்டது. அதன் மற்றுமொரு அங்கமாகவே மகிந்த வெளியேற்றப்பட்டுள்ளார்.
மகிந்த ராஜபக்ச மீண்டும் விஜேராம மாவத்தைக்குச் செல்லமாட்டார். அவரை மக்கள் பார்த்துக் கொள்வார்கள். தமது நாட்டுக்குச் சுதந்திரத்தைப் பெற்றுத் தந்த தலைவரை வேறு நாடுகள் இவ்வாறு செய்வதில்லை. இலங்கையில்தான் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan