நெற் செய்கையை விட்டு விலகும் நிலையில் விவசாயிகள்..!
கல்மடு குளத்தின் கீழ் 2024ஆம் ஆண்டுக்கான பெரும் போக நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகளின் சிலரது வயல்கள் மடிச்சு கட்டி நோய் தாக்கம் காரணமாக முற்று முழுதாக எரிந்த நிலையில் காணப்படுவதன் காரணமாக அறுவடை செய்ய முடியாத நிலையில் தாம் உள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
கடந்த வருட பெரும்போக செய்கையிலும் இதேபோன்று பெரும் நஷ்டத்தை எதிர் நோக்கியதாகவும் தற்பொழுதும் இந்நிலை ஏற்பட்டுள்ளதன் காரணமாக விவசாயிகள் ஆகிய தமக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக இனி வரும் காலங்களில் நெற்செய்கையில் இருந்து விலகுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்
அரசாங்கம் தமக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவி செய்ய வேண்டும் எனவும் இந்நிலை தொடருமாயின் தேங்காய்க்கு ஏற்பட்ட நிலையே அரிசிக்கும் ஏற்படக் கூடும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |