கிளிநொச்சியில் மாவட்ட அரச அதிபருக்கு மனு சமர்ப்பித்த விவசாயிகள்
கிளிநொச்சி வன்னேரிக்குளத்தின் கீழான புனரமைப்பு பணிகளை வனவளத் திணைக்களம் தடுத்துள்ளதாகவும், அதிலுள்ள தடைகளை நீக்கி புனரமைப்பு பணியினை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரியும் விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகளால் மாவட்ட அரச அதிபருக்கு மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.
வன்னேரிக்குளத்தின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் அதன் வான்பகுதியை புனரமைப்பதற்கு வனவளத் திணைக்களம் தடைகளை ஏற்படுத்தியுள்ளது.
பிரதான வாழ்வாதார தொழில்
இதனால் குறித்த குளத்தின் புனரமைப்பு பணிகள் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளன. எனவே 550க்கும் மேற்பட்ட குடும்பங்களின் பிரதான வாழ்வாதார தொழிலாக இந்த குளத்தின் கீழான விவசாயமே காணப்படுகின்றது.

இவ்வாறு குளம் புனரமைக்கப்படாத இடத்தில் விவசாயிகளின் நிலை கேள்விக்குறியாகும் என தெரிவித்துள்ளதுடன், வனவள திணைக்களத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ள குறித்த புனரமைப்பு பணிகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் இன்று (05-10-2026) மாவட்ட அரச அதிபரை சந்தித்து மனு ஒன்றினை கையளித்துள்ளனர்.
