இடைத்தரகர்களிடமிருந்து விவசாயிகள் காப்பாற்றப்பட வேண்டும்: வேதநாயகன் கருத்து
இடைத்தரகர்களிடமிருந்து விவசாயிகளை காப்பாற்றி அவர்களின் உற்பத்திப் பொருட்களுக்கு நியாயமான சந்தைவிலை பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
மறவன்புலோ சகலகலாவல்லி வித்தியாலயத்தில் இன்று(13.01.2025) திங்கட்கிழமை இடம்பெற்ற நெல் அறுவடை விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“யாழ்ப்பாணத்தில் நெற்செய்கை என்பது வான்பார்த்த பயிராகவே உள்ளது. மழையை நம்பி ஒருபோகம் மாத்திரமே செய்கின்றோம்.
உரிய நடவடிக்கை
எனவே, தற்போதுள்ள காலநிலையின் மாற்றத்தைப் பயன்படுத்தி சிறுதானியப் பயிர்செய்கையில் ஈடுபட்டு விவசாயிகள் தங்கள் வருமானத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டும்.
எமது மண்ணின் தன்மைக்கு ஏற்பவும், எந்தப் பயிரை உற்பத்தி செய்தால் ஏற்றுமதி செய்யலாம் என்பதையும் ஆராய்ந்து அதற்கு ஏற்ப விவசாய நடவடிக்கைகளை எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டும். அதற்கு விவசாயத் திணைக்களம் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |