கிளிநொச்சியில் பண்ணையாளர்கள் போராட்டம் (Photos)
கிளிநொச்சியில் மேச்சல் நிலம் கோரி மாடுகளுடன் பண்ணையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த போராட்டம் இன்று (02.08.2023) இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி கோணாவில் கிராமத்தைச் சேர்ந்த கால்நடை வளர்ப்பாளர்களே தங்களுக்குரிய மேச்சல் நிலத்தை கோரி இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை
நீண்ட காலமாக தங்களுக்குரிய மேச்சல் நிலம் தொடர்பில் பல்வேறு
தரப்பினர்களிடம் கோரிக்கை விடுத்த போதும், அது தொடர்பில் எவ்வித
நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் விதைப்பு மற்றும்
வறட்சியான காலங்களில் தங்களது கால்நடைகளை வளர்ப்பதில் கடும்
நெருக்கடிகளை எதிர்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இந்த விடயத்தல் உரிய கவனம் செலுத்தி விரைவாக மேச்சல் நிலத்தை ஒதுக்கீடு செய்து தருமாறு கால்நடை வளர்ப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |








12 ஆண்டுகளாக வேலையே செய்யாமல் ரூ.28 லட்சம் சம்பளம் வாங்கிய பொலிஸ்காரர்.., கண்டுபிடித்தது எப்படி? News Lankasri
